உலமா கட்சித்தலைவரை அழைத்து, கண்டி கலவரத்தை தெரிந்து கொண்ட உலக சமாதான இயக்கத்தின் டொக்டர் கைல்.

தென் கொரியாவை தளமாக கொண்டு இயங்கும் HWPL எனும் உலக சமாதான இயக்கத்தின் டொக்டர் கைல் நேற்று உலமா
கட்சித்தலைவருடன் நேரடி விடியோ அழைப்பில் கலந்து கொண்டு இலங்கையில் கண்டியில் ஏற்பட்ட கலவரம் சம்பந்தமாக கேட்டறிந்தார்.
இதன் போது நிகழ்வுகள் அனைத்தையும் உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் விளக்கினார்.
இவற்றுக்குரிய காரணங்கள் வினவப்பட்ட போது பின் வருமாறு உலமா கட்சித்தலைவர் கூறினார்.
உண்மையில் இலங்கையின் சிங்கள பௌத்த மக்கள் மிகச்சிறந்தவர்கள். அவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் நல்லுறவே காணப்படுகிறது. ஆனால் அண்மைக்காலமாக உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கெதிரான ஊடக யுத்தம் நடக்கிறது. இதன் பின்னால் பல வெளிநாடுகள் உள்ளன. அவை முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என முஸ்லிம் வெறுப்பு பிரசாரங்களையும் பொய்யான செய்திகளையும் வெளியிடுகின்றன.
இவை காரணமாக இலங்கையில் உள்ள சில பௌத்த சமய தலைவர்கள் இது பற்றி ஆராயாமல் முஸ்லிம் விரோத பேச்சுக்களை தமது மக்கள் மத்தியில் விதைப்பதும் காரணமாகும்.
அத்துடன் இதில் அரச தரப்பின் பின் புலமும் உள்ளது. அரசு பலவீனமடையும் போது, நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது அவை ஊடகங்களின் தலைப்புச்செய்தியாக வராமல் இருக்க இத்தகைய கலவரங்கள் உருவாக்கப்பட்டு அவை தலைப்பு செய்திகளாகின்றன.
இலங்கையை பொறுத்தவரை இங்குள்ள பௌத்த சமயத்தலைவர்களுக்கு அரசியல்வாதிகளை விட மக்கள் சக்தி இருக்கிறது. இலங்கை என்பது மதங்களுக்கு முன்னுரிமை வழங்கும் நாடாகும் என்பதால் அரசும் பௌத்த சமயத்தலைவர்களுக்கு கட்டுப்பட்டே இருக்கிறது. இந்த நிலையை பயன் படுத்தி நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த பௌத்தசமயத்தலைவர்களால் முடியும் என நம்புகிறேன்.
இஸ்லாத்தை போன்றே பௌத்த தர்மமும் அன்பையும் சமாதானத்தையும் போதிக்கிறது. அதே போல் ஏனைய மதங்களும் உள்ளன.
முஸ்லிம்கள் பற்றிய பொய்யான ஊடக பிரசாரங்கள் போகும் போதும் முஸ்லிம்கள் அதற்குரிய பதில்களை தராமையும் முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப்பிராயம் நிலைக்க காரணமாகும். இது விடயத்தில் நாம் மட்டுமே விளக்கங்களையும் அறிக்கைகளாக விளக்குகிறோம். ஆனாலும் தமிழ் மொழியிலான எமது அறிக்கைகளை சிங்கள மொழியில் மொழி பெயர்த்து வெளியிடக்கூட முஸ்லிம்கள் அக்கறையற்று இருக்கிறார்கள்.
எம்மை பொறுத்தவரை நாட்டிலும் சர்வதேசத்திலும் சமாதானம் ஏற்பட அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். இந்த வகையில் தென் கொரியாவை தளமாக கொண்டு உலகின் பல நாடுகளில் கிளை அமைத்து செயற்படும் HWPL இலங்கையில் சமாதானம் ஏற்படவும் அக்கறை காட்டியமைக்காக எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். மேற்படி சம்பாசனை சுமார் ஒரு மணி நேரம் இடம் பெற்றது.
உலமா கட்சித்தலைவரை அழைத்து, கண்டி கலவரத்தை தெரிந்து கொண்ட உலக சமாதான இயக்கத்தின் டொக்டர் கைல்.
Reviewed by nafees
on
22:32
Rating:
Reviewed by nafees
on
22:32
Rating:
No comments: