ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முஸ்லிம் எம்.பிக்கள் கட்டாயம் ஆதரவளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் சமூகத் துரோகிகள்.


(ஏ.ஆர்.ஏ.பரீல்) 
அம்பாறை மற்றும் கண்டி, திகன பகுதிகளில் இடம் பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களை
உடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தவறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரதும் கடமையாகும்.

அவர்கள் ஆதரவளிக்காவிடின் சமூகத் துரோகிகளாக இனங்காணப் படுவார்கள் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.


பிரதமர் ரணில் விக்கிரமசிங் கவுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியினரால் முன்வைக்கப் பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கூட்டு எதிர்க்கட்சியினரால் பிரதம ருக்கு எதிராக கொண்டு வரப் பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான குற்றச்சாட்டுகளும், கண்டி, அம்பாறை பகுதிகளில் இடம் பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான வன்முறை சம்பவங்க ளின்போது சட்டத்தை உடன் அமுல்படுத்தாமை பற்றிய குற்றச்சாட்டும் உள்ளடக்கப் பட்டுள்ளன.


சம்பவங்கள் இடம் பெற்ற காலகட்டத்தில் பிரதமரே சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகப் பதவி வகித்தார்.

கலவரம் இடம்பெற்றபோது அரசு உடனடியாக அதனை கட் டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை , பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் பார்த்துக் கொண்டிருந்த நிலையிலே வன்செயல்கள் இடம்பெற் றுள்ளன. முஸ்லிம் பாராளு மன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இதுதொடர்பில் கடிதங்களையும் அனுப்பி வைத்தார்கள்.

இந்நிலையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிரான நம்பிக் கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.

அவ்வாறு ஆதரவளிக்காதுவிடின் முஸ் லிம்களுக்கு எதிராக நடை பெற்ற அநியாயங்களுக்கு துணைபோனதாகவே சமூகம் கருதும்.

எனவே, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மனச் சாட்சிக்கு விரோதமில்லாது செயற்பட வேண்டும்.

அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்செயல்கள் இடம்பெற்ற பின்பு அம்பாறைக்கு விஜயம் செய்த பிரதமர் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பகுதிக்கு விஜயம் செய்யவில்லை.

 இதனையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முஸ்லிம் எம்.பிக்கள் கட்டாயம் ஆதரவளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் சமூகத் துரோகிகள். ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முஸ்லிம் எம்.பிக்கள் கட்டாயம் ஆதரவளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் சமூகத் துரோகிகள். Reviewed by nafees on 23:16 Rating: 5

No comments:

Powered by Blogger.