இலங்கை வந்த ஈரான் சபாநாயகர் & குழுவுக்கு வரவேற்பு.


நாட்டிற்கு வருகை தந்துள்ள ஈரான் சபாநாயகர் அலி லர்ஜானி உள்ளிட்ட குழுவினர் இன்று பாராளுமன்றத்தை பார்வையிடவுள்ளனர்.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் அழைப்பின் பிரகாரம் நேற்றிரவு இவர்கள் நாட்டிற்கு வருகை தந்ததனர்.

ஈரான் சபாநாயகர் உள்ளிட்ட 36 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

விசேட விமானத்தினூடாக நாட்டை வந்தடைந்துள்ள இந்த பிரதிநிதிகள் குழு நாளை (20) வரை நாட்டில் தங்கவுள்ளனர்.

இதன்போது சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உயர் மட்ட அரச அதிகாரிகளை சந்தித்து ஈரான் சபாநாயகர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துரையாடவுள்ளனர்.
இலங்கை வந்த ஈரான் சபாநாயகர் & குழுவுக்கு வரவேற்பு. இலங்கை வந்த  ஈரான் சபாநாயகர் & குழுவுக்கு வரவேற்பு. Reviewed by nafees on 19:07 Rating: 5

No comments:

Powered by Blogger.