அரசாங்கம் உறுதியளித்தபடி சேதங்களுக்குள்ளான பள்ளிவாசல்கள் வீடுகள், கடைகள் திருத்தியமைக்கப் படவில்லை .



அண்மையில் கண்டி, திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள், வீடுகள் மற்றும் கடைகள் சிங்கள - தமிழ் புத்தாண் டுக்கு முன்பு புனர்நிர்மாணிக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும் இதுவரை எந்தவொரு பள்ளிவாசலோ, வீடோ, கடையோ புனரமைக்கப்படவில்லை என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கண்டி மாவட்டக்கிளை சுட்டிக்காட்டியுள்ளது.


அத்துடன் மே மாதம் நடுப்பகுதியில் முஸ் லிம்கள் ரமழான் மாதத்தை எதிர்நோக்கியுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி வாசல்களும், வீடுகளும் கடைகளும் நோன்புக்கு முன்பு புனரமைக்கப்ப டவேண்டும் என புனர் வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமி நாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


வன்செயல்களினால் கண்டி, திகன மற்றும் தெல்தெனிய பகுதி களில் 289 வீடுகள், 17 பள்ளிவாசல்கள் மற்றும் 217 கடைகள் சேதமாக் கப்பட்டுள்ளன. 3 பள்ளிவாசல்கள் முற்றாக எரிக்கப்பட்டுள்ளன


இந்த வன்செயல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வீடுகளையும் தங்கள் பொருளாதாரத் தையும் இழந்துள்ளனர் என உலமா சபை சுட்டிக் காட்டியுள்ளது


வன்செயல்களால் பாதிக் கப்பட்டுள்ள முஸ்லிம்கள் தற்போது எதிர்நோக்கி யுள்ள அசௌகரியங்கள் தொடர்பாக உலமா சபை கண்டி மாவட்டக் கிளை அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் 

முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்..ஹலீ மிடம் கலந்துரையாடியுள்ளது


உலமா சபையின் கண்டி மாவட்டக்கிளை காரியாலயத்தில் அமைச்சர் ஹலீமுக்கும், உலமா சபை பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.


இது தொடர்பில் அகில இலங்கை உலமா சபையின் கண்டி மாவட்டக் கிளைத் தலைவர் மௌலவி எச். உமர்தீன் 'விடிவெள்ளி'க்கு கருத்து தெரிவிக்கையில், "அரசாங்கம் உறுதியளித்தபடி சேதங்களுக்குள்ளான பள்ளிவாசல்கள் வீடுகள், கடைகள் திருத்தியமைக்கப்படவில்லை .


தற்போது கண்டிப் பகுதியில் தொடராக மழைபெய்து வருவதால் பாதிக்கப்பட்ட மக்கள் பல சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர். வீடுகள் சேதங்களுக்குள்ளாக்கப் பட்டதால் பலர் உறவினர் வீடுகளில் தங்கியிருக்கின்றனர். மேலும் சிலர் இரு மாதகாலத்துக்கே வாடகை வீடுகளைப் பெற்றுள்ளனர். தற்போது வன்செயல் இடம்பெற்று இருமாதகாலம் அண்மிக்கப் போகிறது.


பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள், வீடுகள்,

கடைகள்  சிங்கள தழில் புத்தாண்டுக்கு முன்பு புனரமைத்துத் தருவதாக இராணுவத் தளபதி உறுதியளித்திருந்தாலும் அதுவும் நிறைவேற்றப்ப டவில்லை


உலமாசபை இதுதொடர்பாக அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், லக்ஷ்மன் கிரியெல்ல ஆகிய இருவரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளது. நஷ்டஈடுகள் வழங்கப்புடுவதும் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது


அடுத்த மாத நடுப்பகுதியில் நோன்பு ஆரம்பமாகவுள்ளதால் நோன்புக்கு முன்பு பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளும், பள்ளிவாசல்களும் கடைகளும்புனரமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்


பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இதன் பிறகும் பொறுமை காக்கமுடியாது. நாங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தப் போகிறோம் என்கிறார்கள். நாம் அவர்களை பொறுமை காக்கும்படி கூறியுள்ளோம். எனவே நோன்புக்கு முன்பு புனர்நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்" என்றார்.

அரசாங்கம் உறுதியளித்தபடி சேதங்களுக்குள்ளான பள்ளிவாசல்கள் வீடுகள், கடைகள் திருத்தியமைக்கப் படவில்லை . அரசாங்கம் உறுதியளித்தபடி சேதங்களுக்குள்ளான பள்ளிவாசல்கள் வீடுகள், கடைகள் திருத்தியமைக்கப் படவில்லை . Reviewed by nafees on 03:54 Rating: 5

No comments:

Powered by Blogger.