பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நிதியை பயன்படுத்துவதை தடுப்பதற்கு இலங்கை நடவடிக்கை ..



பணத்தை தூய்மையாக்குதல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக
நிதியை பயன்படுத்துவதை தடுப்பதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ளும் என்று நிதி ராஜாங்க அமைச்சர் ஏரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அணி சேரா நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விபரிக்கும் அவர் நிறுவனங்களில் 25 வீததை கொண்டுள்ளவர்கள் குறித்தும், குறித்த தகவல்கள் பண தூய்மைக்கல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் குற்ற திணைக்களத்திற்கு அனுப்புவதற்கு அரச நிறுவன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று சிலர் தெரிவிக்கும் கூற்றை நிராகரித்துள்ளார். 

இதேபோன்று இந்த நிறுவனங்களின் பணிப்பாளர்கள் மற்றும் பங்கு உரிமையாளர்களிடம் விசாரணை செய்வதற்கு முழுமையான அதிகாரம் குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இவற்றை நிராகரித்துள்ள அமைச்சர் எதிர்க்கட்சியினர் முதலீடுகளை மேற்கொள்வோர் தொடர்பில் பீதியை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான கூற்றுக்களை தெரிவிப்பதாக கூறினார். கடந்த வருடத்தில் ஆகக் கூடுதலாக நேரடி வெளிநாட்டு முதலீடு பெறப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்கான முயற்சிக்காக இவ்வாறானோர் இத்தகைய விடயங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.

 பணத்தை தூய்மையாக்கல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதி வழங்கப்படுதை தடுப்பதற்காக பல நடவடிக்கைகளை வலுவூட்டுவதற்கும் செயல்திறன் மிக்கதாக முன்னெடுப்பதற்கும் நிறுவன சட்டத்தில் திருத்தங்கள் சிலவற்றை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நிதியை பயன்படுத்துவதை தடுப்பதற்கு இலங்கை நடவடிக்கை ..  பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நிதியை பயன்படுத்துவதை தடுப்பதற்கு இலங்கை நடவடிக்கை .. Reviewed by nafees on 21:49 Rating: 5

No comments:

Powered by Blogger.