தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஐ.தே.க நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பது மக்களுக்கு தவறான தகவலை கொண்டுச் செல்லும்.


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கக்கூடாது என  ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டமைப்பின் ஆதரவை பெறுவதானது பொதுமக்களுக்கு தவறான தகவலை கொண்டுச் செல்லுமென ஜனாதிபதி எச்சரித்துள்ளதாக ஏசியன் டரிபியுன்  செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக்கொண்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஐ.தே.க நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பது மக்களுக்கு தவறான தகவலை கொண்டுச் செல்லும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஐ.தே.க நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பது மக்களுக்கு தவறான தகவலை கொண்டுச் செல்லும். Reviewed by nafees on 01:06 Rating: 5

No comments:

Powered by Blogger.