மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுவிக்கப்பட்டார்



முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கோட்டை
நீதவான் நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

கடுமையான நிபந்தனைகளுடன் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு நீதிமன்றம் நேற்று பிணை வழங்கிய போதும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி முடியாது போனதால் அவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

அவரது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அவருடைய கடவுச்சீட்டு மற்றொரு வழக்கில் மேல் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருப்பதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர். 

நீதிமன்ற விடுமுறை காரணமாக பிணை நிபந்தனைப்படி அவரது கடவுச்சீட்டு ​மேல் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதை அவரால் உறுதிப்படுத்த முடியாது போனதால், இன்றைய தினம் வரை அவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

அவருடைய கடவுச்சீட்டு மேல் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது இன்று உறுப்படுத்தப்பட்டதையடுத்து அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், லங்கா சதொன நிறுவனத்தால் கெரம் போர்ட் கொள்வனவு செய்த போது 53 மில்லியன் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுவிக்கப்பட்டார் மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுவிக்கப்பட்டார் Reviewed by nafees on 00:34 Rating: 5

No comments:

Powered by Blogger.