நேற்று கண்டி மஹிய்யாவயில் வைத்து முஸ்லிம் மாணவர்கள் தாக்கப்பட்ட போது காடையர்களை விரட்டியடித்த சிங்கள சகோதரர் .

-இக்பால் அலி-
நேற்று குருநாகல் இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்கு சென்ற நான்கு முஸ்லிம்
மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரிக்கு முன்னால் வைத்து நான்கு இனந்தெரியாத சந்தேக நபர்கள் தாக்குதல் நடத்திய போது சிங்கள சகோதரர் முன்நின்று விரட்டியடித்துள்ளார்.
இது தொடர்பாக தாக்குதலுக்குடளான கண்டி பொலிஸ் நிலையத்தில் மாணவர்கள் முறைப்பாடுகள் தெரிவித்துள்ளனர்
இந்தச் சம்பவம் (31) சனிக்கிழமை காலை 8.00 மணி அளவில் கண்டி மஹிய்யாவ வித்தியார்த்த கல்லூரிக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
குருநாகல் தெலியாகொன்னவிலிருந்தும் மற்றும் பறகஹதெனியவில் இருந்து பிரத்தியோக வகுப்புகளுக்காக 13 முஸ்லிம் மாணவர்கள் கண்டிக்குச் சென்றுள்ளனர். இந்தப் பேரூந்தில் இரு முஸ்லிம் மாணவிகளும் இருந்துள்ளனர்.
இந்தப் பேரூந்தில் பிரயாணம் செய்த நான்கு காடையர்களும் மது அருந்தியுள்ளதோடு அதில் இருந்த முஸ்லிம் மாணவிகளைத் தீண்டிக் கொண்டு வந்துள்ளனர்.
இதனை அதானித்த முஸ்லிம் மாணவர்கள் அவர்களுக்குப் பாதுகாப்பாகச் செயற்பட்டுள்ளனர்.
கண்டி வித்தியார்த்த கல்லூரிக்கு முன்னால் இந்த மாணவர்கள் மாணவிகள் இறங்கும் போது அந்த நான்கு கடையர்களும் இறங்கி தெருவில் இருந்த இரும்பு கம்பியைக் கொண்டு வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலின் போது நான்கு மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். ஒருவருடைய கையடக்கத் தொலைபேசி முற்றாக சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவத்தை பலர் பார்த்துக் கொண்டு நின்ற சிங்கள சகோதரர் ஒருவர் முன்னுக்கு துணிந்து வந்து அவர்களை விரட்டி அடித்துள்ளார்.
இந்தச் சம்வத்துடன் தொடர்புடையவர்கள் மஹிய்யாவையைச் சேர்ந்த நான்கு தமிழ் வாலிபர்கள் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தற்போது கண்டியில் எரியும் இன வாதப் பிரச்சினைக்கு தீ மூட்டுகின்ற செயற்பாடாகவும் இந்தச் சம்பவம் கருதப்படுகவதாக அமைந்துள்ளது .
இது தொடர்பாக கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோருடம் முறையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் பொலிஸாருக்கு விடுத்த வேண்டுகோளை அடுத்து கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.
நேற்று கண்டி மஹிய்யாவயில் வைத்து முஸ்லிம் மாணவர்கள் தாக்கப்பட்ட போது காடையர்களை விரட்டியடித்த சிங்கள சகோதரர் .
Reviewed by nafees
on
03:42
Rating:
Reviewed by nafees
on
03:42
Rating:
Widayam theriyamal padhiwuhalai ida wendam.. yar indha ikbal ali? Awarin tholaipesi ilakkaththai thara mudiyuma? Oru nambikkaikkuriya seidhihalai walangum inaiththalamana madawala news um unmaiyai ariyamal idhuponra padhiwuhalai iduwai enni naan mihundha kawalai adaihiren... mudiyumanal ippadhiwai neekkikollungal. Eriyum neruppil ennai ootra wendam.
ReplyDeleteunmaiyai neengal sollame? enna nadandhadhu angu?
Delete