தவற விட்ட ஒரு வாய்ப்பு....

நேற்று தென்னக்கும்புற பள்ளிவாசலில் நடந்த நிகழ்வு தற்செயலாக நடந்ததாகவே இருக்கட்டும்.
ஒரு நாட்டிற்கு விருந்தினராய் வந்த மதகுருமார் குழுவினரின் பாதயாத்திரையின் ஓரங்கமாக அவர்கள் பள்ளிவாசலில் தேனீர்,சிற்றுண்டி வழங்கி கௌரவிக்கப்படும் படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.அதுதான் நடந்தது.
ஒவ்வொரு தரிப்பிடத்திலும் நடந்ததை போல அவர்கள் சமய அனுஷ்டானத்தில் ஈடுபட்டார்கள்.சரி.
சமய சடங்கை செய்வது அவர்களது உரிமை.அதை அவர்களால் துணிவுடன் கேட்க முடிகிறதென்றால்.....
"இது அல்லாஹ்வின் மாளிகை.இங்கு அவனுடன் இன்னொருவரை (அவர்களுக்கு கடவுள் தானே) அழைப்பது இணைவைப்பு எனும் பாரதூரமான,அல்லாஹ் வெறுக்கும் ஒரு பாவத்தில் கொண்டு சேர்க்கும் "என ஏன் நம்மவர்களால் இதமாக துணிச்சலுடன் எடுத்தியம்ப முடியாமல் போனது??
எமது கொள்கைகளை எடுத்துச் சொல்வதுதான் தஃவா என்றால் ,அது தாஇக்களால் முடியாமல் போனது ஏன்??
தேனீர் விருந்தை ஏற்பாடு செய்ய முடியாதென மறுத்திருக்க தேவையில்லை.அது இன நல்லுறவை பாதிக்கும்.
படியேறி வந்தவர்க்கு இருக்க இடமளிக்காமல் அடித்து துரத்தவும் வேண்டாம்.அது சகவாழ்வை,நல்லிணக்கத்தை சிதைக்கும்.
ஆனால் "இது தான் எமது கொள்கை,நிலைப்பாடு" என தெளிவு படுத்த முடியாமல் போனது ஏன்???
சுடு மணற்பரப்பில் "யா அஹத் ,யா அஹத்" என துணிந்து சொன்னாரே,பிலால் பின் ரபீஆ(ரலி)...
சுடப்பட்ட கற்குவியலில் சதைகள் பொசுங்கி வழிய துணிவுடன் இருந்தாரே கப்பாப் பின் அரத் (ரலி)...
அவர்கள் அன்று நல்லிணக்கம்,சக வாழ்வு என்று விட்டுக் கொடுத்திருந்தால்.....
சகவாழ்வு என்பது எமது கொள்கைகளை,தனித்துவத்தை இழந்து வாழ்வதல்ல.இது தான் எமது கொள்கை,மத அனுஷ்டானம் என உணர்த்தி புரிய வைப்பதை விட்டு விட்டு எல்லாவற்றையும் விட்டுக் கொடுப்பதால் சகவாழ்வு மலரப் போவதில்லை.
fauzuna binth izzadeen
2018/4/4
தவற விட்ட ஒரு வாய்ப்பு....
Reviewed by nafees
on
21:25
Rating:
Reviewed by nafees
on
21:25
Rating:
No comments: