நம்பிக்கையில்லா பிரேரணை மீதான தேசியத்தலைவரின் மழுங்கிப்போன வீரப்பேச்சு..
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பணப்பலத்துடனும் வல்லரசுகளின்
ஆதிக்கத்துடனும் மிக இலகுவாக
பாராளுமன்றில் தோற்கடிக்கப்பட்டது.
பிரேரணை மீதான வாதம், பிரதிவாதம் எதிர்பார்த்த அளவு சூடாக காணப்பட்டாலும், சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் சார்பான உரையில் தலைவர் ஹக்கீமின் உரை பிரதமரை நியாயப்படுத்திய வீரப்பேச்சாக காணப்பட்டது.
நம்பிக்கையில்லா பிரேரணை எதற்காக பாராளுமன்றில் கொண்டுவரப்பட்டது என நோக்குமிடத்து, பிணை முறியில் ஏற்படுத்தப்பட்ட நிதி மோசடியை பிரதானமாக கொண்டு, திகன வன்முறைக்கும் எதிராகவே அது கொண்டுவரப்பட்டது. பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களால் செய்யப்பட்ட நிதி மோசடியின் விளைவே இந்த நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்புலம்.
ஆனால் எமது தேசியத்தலைவர் தனது உரையில் பிணைமுறி மோசடி பற்றி ஒரு இடத்திலேனும் தனது உரையில் குறிப்பிடவில்லை. திட்டமிட்டு எழுதிக்கொடுக்கப்பட்ட வசனங்கள் ஒப்புவிக்கப்பட்டது போல் உரைகள் பாராளுமன்றில் அமைந்திருந்தன.
தலைவர் தனது உரையில் கண்டி திகன பிரதேசங்களில்
ஏற்பட்ட பிரச்சினைகளை மூலதனமாக வைத்து எதிரணியினர் முஸ்லிம்களிடத்தில் இருந்து அரசியல் இலாபம் அடைய விரும்புகின்றனர் என்ற கருத்தை வலியுறுத்தி பேசியிருந்தார். திகன பிரதேசங்களில் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக சட்ட, ஒழுங்கு அமைச்சரால் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அதற்காக அப்போது சட்ட, ஒழுங்கு அமைச்சராக இருந்த பிரதமரை பழிவாங்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
சிறுபான்மை அரசியல் தலைவர்கள் என்ற வகையில் தேசிய அரசியலின் ஸ்திரத்தன்மையை பேண வேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதாகவும் வலியுறுத்தினார்.
சிறுபான்மை அரசியல் தலைவராக இருக்கும் ஹக்கீம் அவர்கள், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறிய அரசை ஆட்டம் காண வைக்க கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டு, ஐக்கிய தேசியக்கட்சிக்கு கூஜா தூக்கியதன் மூலம் பின்வரும் விடயங்களை சிங்கள அரசுக்கும், சிங்கள சமூகத்திற்கு தெளிவுற உறுதிப்படுத்தியுள்ளார்.
1. சிறுபான்மைக்கெதிராக அரசியல் இலாப நோக்கம் கருதி எந்த வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டாலும், ஆளும் கட்சியில் உள்ள சிறுபான்மை பிரதிநிதிகள் அதை பொருட்படுத்தவே மாட்டார்கள் என்பதும்.
2. இன அழிப்புகளுக்கு எதிராக, அமைச்சு மாற்றமும், இரண்டு மூன்று கைதுகளும் சிறுபான்மை மக்களை ஆசுவாசப்படுத்தும் என்பதும்.
3. சிறுபான்மை மக்களின் குரல்களை எவ்வாறு நெருக்கினாலும், அதன் தலைமைகள் எப்போதும், அமைச்சுக்களை வழங்கும் ஐக்சிய தேசிய கட்சிக்கு அரசுக்கு ஆதரவாகவே ஒலிக்கும் என்பதையும்,
4. ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியில் ஏற்படுத்தப்படும் முஸ்லிம்களுக்கெதிரான எந்த இன வன்முறையும், ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதையும் தெளிவுற பெரும்பான்மை சமூகத்திற்கு பதிவு செய்துள்ளார்.
இவை அனைத்துமே பாராளுமன்றில் பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து பெயர் தாங்கி முஸ்லிம் பாராளும்னற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும், கட்சித்தலைவர்களுக்கு பொருந்தக்கூடியதாகும்.
பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காவிடினும், ஆகக்குறைந்தது முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைகள் இனியொருமுறை நடக்குமிடத்து எந்த ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையையும் எதிர்க்கப்போவதில்லை என்ற எச்சரிக்கையையாவது பாராளுமன்றில் பதிவு செய்யத்தவறிவிட்டனர் எமது தலைமைகள்.
தேசியக்கட்சிகளின் நலன் நோக்கி, வாக்களித்த மக்களின் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் புறந்தள்ளும் கட்சிகளும் தலைமைகளும் சமூகத்திற்கு கிடைத்த சாபக்கேடுகளே!
மூதூரிலிருந்து அட்டாளைச்சேனை அஸ்லம்
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான தேசியத்தலைவரின் மழுங்கிப்போன வீரப்பேச்சு..
Reviewed by nafees
on
01:17
Rating:
Hahahah.... Writer is the broker to handle the money transfer???
ReplyDeleteBoolshit!!!
இந்தக் கட்டுரை ஒரு குடிகாரனின் வெட்டிப் பேச்சி போல இருக்கிரது.
ReplyDelete