கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க களனியில் “ ஹை டெக்” தொங்கு பாலம்

கொழும்பில் நிலவும் வாகன நெரிசலை குறைப்பதற்கு களனியில் தொங்கு பாலம் ஒன்று
அமைக்கப்படுகின்றது.களனி பாலத்திற்கு அருகில் உள்வரும் மற்றும் வெளியேறும் வாகனங்களினால் தினமும் கடும் வாகன நெரிசல் எற்படும் நிலையில் இதற்கு தீர்வாக அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 3 கிலோ மீற்றர் தூரத்திற்கு தொங்கு பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
ஜப்பானினால் வழங்கப்பட்ட 35,020 மில்லியன் ரூபா கடன் உதவியுடன் இந்த பாலம் நிர்மாணிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்திற்காக 12.9 ஹெக்டயர் நிலப்பரப்பை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளதுடன், 2020 ஆம் ஆண்டளவில் நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன.
கண்டி – கொழும்பு , நீர் கொழும்பு – கொழும்பு வீதியில் உள்வரும் வாகனங்களும் கட்டுநாயக்க அதிவேக வீதியில் வரும் வாகனங்களும் தற்போது நிர்மாணிக்கப்படும் புதிய பாலத்தின் ஊடாகப் பயணிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க களனியில் “ ஹை டெக்” தொங்கு பாலம்
Reviewed by nafees
on
10:28
Rating:
No comments: