96ம் ஆண்டு முதல் கல்முனை உள்ளூராட்சி சபையை மு கா ஆட்சி செய்தும் கல்முனை தைக்கா வீதி இன்னமும் முறையான திருத்தத்தை காணவில்லை !!

96ம் ஆண்டு முதல் கல்முனை உள்ளூராட்சி சபையை முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி செய்தும்
கல்முனையின் முதலாவது ஜும் ஆ பள்ளிவாயல் அமைந்துள்ள வீதி இன்னமும் முறையான திருத்தத்தை காணவில்லை என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கல்முனையின் முதலாவது ஜும் ஆ பள்ளிவாயல் அமைந்துள்ள வீதி இன்னமும் முறையான திருத்தத்தை காணவில்லை என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கல்முனை தைக்காவீதியின் மோசமான நிலை பற்றி ஆராயும் கட்சி கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
கல்முனை தவ்ஹீத் ஜும் ஆ பள்ளி உள்ள தைக்கா வீதி மழை காலத்தில் வானம் தெளிவாய் பூமியின் தெரியும் கோலமாய் உள்ளது.
இப்பாதையை திருத்தும் படி பத்து வருடங்களாக உலமா கட்சியினராகிய நாம் தனித்து நின்று குரல் கொடுத்து வருகிறோம். பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகளின் கொள்ளையடிப்புக்குரிய பிச்சை புண்ணாக இந்த வீதி உள்ளது. இதனைக்காட்டியே அபிவிருத்தி என்ற பெயரில் சுருட்டுகிறார்கள்.
கொஞ்சம் இந்த வீதியை திருத்துவது அதற்காக லட்சக்கணக்கில் கொள்ளையடிப்பது வழமையாகி விட்டது.
அண்மையில் உலமா கட்சியின் தொடரான சுட்டிக்காட்டலை தொடர்ந்து இந்த வீதி கடந்த வருடம் செப்பனிடப்பட்டது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் கொள்ளையர்களால் திட்டமிட்ட வடி காண் இன்றி ஏனோ தானோ என வீதியை மேலோட்டமாக செப்பணிட்டதன் காரணமாக குறுகிய காலத்துக்குள்ளாகவே பழைய நிலைக்கு இவ்வீதி வந்துள்ளது.
இந்த வீதியில் உள்ளோரில் 98 வீதம் முஸ்லிம் காங்கிரஸ் வாக்காளர்களாகும். அப்படியிருந்தும் அம்மக்களை இக்கட்சி தொடர்ந்தும் ஏமாற்றுகிறது.
அண்மையில் நடந்த உள்ளூராட்சி தேர்தலில் மிக அதிக வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றது இந்த வீதி அமைந்துள்ள வட்டாரத்திலாகும். ஆனாலும் மக்கள் நலனை இக்கட்சி பார்க்காததால் தினமும் மக்கள் குறிப்பாக தொழுகையாளிகளும் பெண்களும் பாரிய அவஸ்தையை அனுபவிக்கின்றனர்.
ஆகவே மேற்படி வீதியில் உள்ள மக்கள் முஸ்லிம் காங்கிரசின் இத்தகைய கொள்ளைக்கும் ஊழலுக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய முன் வர வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்தும் இந்த வீதியைக்காட்டி கொள்ளை நடக்குமே தவிர மக்கள் பயன் பெறும் வீதியாக மாறாது.
96ம் ஆண்டு முதல் கல்முனை உள்ளூராட்சி சபையை மு கா ஆட்சி செய்தும் கல்முனை தைக்கா வீதி இன்னமும் முறையான திருத்தத்தை காணவில்லை !!
Reviewed by nafees
on
10:46
Rating:
பி. அமைச்சரின் வீதியையே அமைச்சர் உதுமாலெப்பை போட்டுக்கொடுத்தது தெரியாதா ?
ReplyDelete