அமித் வீரசிங்க உற்பட 9 பேரின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு...

கண்டி மாவட்டத்திற்குட்பட்ட தெல்தெனிய திகன உள்ளிட்ட பல பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 9 பேரின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சந்தேக நபர்கள் கடந்த 2 ஆம் திகதி தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பான சீ சி ரி வி காணொளி பதிவுகள் நீதிமன்றில் அன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டதோடு, குறித்த காணொளியில் மஹாசொன் அமைப்பின் பிரதானி அமித் வீரசிங்கவும் காணப்படுகின்றார் என அறியப்பட்டதனை தொடர்ந்து, அன்றைய தினம் நீதிமன்றிற்கு சமூகமளிக்காத அமித் வீரசிங்கவை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது.
அமித் வீரசிங்க உற்பட 9 பேரின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு...
Reviewed by nafees
on
18:27
Rating:
Reviewed by nafees
on
18:27
Rating:
No comments: