கனடாவில் இடம்பெற்ற கோர தாக்குதல்.. 9 பேர் உயிரிழந்து, 16 பேர் காயம்.
கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் பாதசாரிகள் மீது வெள்ளை வான் மோதிய விபத்தில் 9 பேர்
வரையில் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி சுமார் 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் இன்று வெள்ளைவான் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த வாகனத்தை செலுத்திய சாரதி ஓட்டியவர் அந்த இடத்தில் இருந்து தப்பியோடிதாக கூறப்பட்ட பொதும் அவர் பின்னர் கைது செய்யப்பட்டதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை அடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த மருத்துவ குழுவினர் படுகாயமடைந்த பொதுமக்களுக்கு முதலுதவி அளித்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
கனடாவில் இடம்பெற்ற கோர தாக்குதல்.. 9 பேர் உயிரிழந்து, 16 பேர் காயம்.
Reviewed by nafees
on
18:47
Rating:
No comments: