நுவரெலியாவில் 82 இடங்களில் சோதனை.


 நுவரெலியா மாவட்டத்தில் நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு பொருட்களை விற்பணை செய்த 5 இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட சுற்றுவளைப்பின் போதே இந்த வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

இந்த சுற்றிவளைப்பில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 25 பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டிருந்ததுடன் இதன் போது 82 ஹோட்டல் மற்றும் வெதுப்பகங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது நுகர்வுக்கு பொருத்தமற்றவிதத்தில் உணவு பொருட்களை விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் 82 இடங்களில் சோதனை. நுவரெலியாவில் 82  இடங்களில் சோதனை. Reviewed by nafees on 04:06 Rating: 5

No comments:

Powered by Blogger.