இங்கிலாந்தில் 70 வருடங்களின் பின் ஏற்பட்ட காலநிலை மாற்றம்.


இங்கிலாந்தில்  வழமைக்கு மாறாக வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும், இதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, மேற்கு லண்டன் பகுதியில் 27.9 செண்டிகிரேட் அளவுக்கு அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1949ம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாறு வெப்பநிலை அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் குளிரான காலநிலைக்கு பழக்கப்பட்ட லண்டன் வாழ் மக்கள் வெயிலின் தாக்கம் காரணமாக குளிரான பிரதேசங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

லண்டன் நகரில் தற்போது கோடைக்காலம் என்றாலும் இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் தாக்கம் இருப்பதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்கிலாந்தில் 70 வருடங்களின் பின் ஏற்பட்ட காலநிலை மாற்றம். இங்கிலாந்தில் 70 வருடங்களின் பின் ஏற்பட்ட காலநிலை மாற்றம். Reviewed by nafees on 18:36 Rating: 5

No comments:

Powered by Blogger.