நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க ஒவ்வொரு உறுப்பினர பிரதமர் 50 மில்லியன் பணம் வழங்கினார்..



பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையைத்
தோற்கடிப்பதற்காக பெருந்தொகை பணத்தை லஞ்சமாக வழங்கினார் என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடகமொன்று வழங்கியுள்ள நேர்காணலொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க – தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ளும்பொருட்டு, தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்தார் எனவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்த ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் சுமார் ஐந்து கோடி ரூபா பணம் வழங்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரணிலிடம் பணம் பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது குறித்து அம்பலப்படுத்தியதாகவும், தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
குறித்த உறுப்பினருக்கு இருந்த கடன் தொல்லை காரணமாகவே அந்தப் பணத்தினை பெற்றுக்கொள்ள நேர்ந்ததாக, அவர் தன்னிடம் கூறியதாகவும் தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கொடுக்கல் வாங்கல் விடயத்தில் மத்திய வங்கி ஊழலில் தொடர்புபட்டவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனவும், அவற்றினை கூடிய விரைவில் ஆதாரத்துடன் வெளிப்படுத்துவதாகவும் தயாசிறி தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க ஒவ்வொரு உறுப்பினர பிரதமர் 50 மில்லியன் பணம் வழங்கினார்..  நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க ஒவ்வொரு உறுப்பினர பிரதமர் 50 மில்லியன் பணம் வழங்கினார்.. Reviewed by nafees on 06:49 Rating: 5

No comments:

Powered by Blogger.