50 இலட்சம் ரூபாய் பெறுமதியான, பீடி சுற்றும் இலை மூடைகள் 25 .

மன்னார் பாம்பன் குந்துகால் கடற்கரைப் பகுதியிலிருந்து 50 இலட்சம் ரூபாய் மதிப்புடைய உயர் தரம்
வாய்ந்த பீடி இலை மூட்டைகள் இன்று (25) காலை மீட்கப்பட்டுள்ளன.
உயர் ரக பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கரை ஒதுங்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து சுங்கப்பகுதியினரும் பொலிஸாரும் இணைந்து குறித்த மூட்டைகளை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட 25 பீடி இலை மூடைகள் உயர் ரகத்தை சேர்ந்தது எனவும் இதன் மதிப்பு சுமார் 50 இலட்சம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடலில் உள்ள மூட்டைகளை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் குறித்த மூட்டைகளை இலங்கைக்கு கடத்தியபோது, அப்படகு மூழ்கியதால் மூட்டைகள் தவறி கடலில் விழுந்திருக்கலாம் அல்லது கடற்படையினரினரின் ரோந்துப்பணியின் போது மூட்டைகளை கடலில் தள்ளிவிட்டு படகுடன் கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
50 இலட்சம் ரூபாய் பெறுமதியான, பீடி சுற்றும் இலை மூடைகள் 25 .
Reviewed by nafees
on
02:07
Rating:
Reviewed by nafees
on
02:07
Rating:
No comments: