எதிர்வரும் 5 வருடங்களில் 40 திரை அரங்கு வளாகங்களை அமைக்க திட்டம்..

சவுதி அரேபியாவின் சினிமா தடை நேற்று முடிவுக்கு வந்துள்ள நிலையில் சவுதி
அரேபியாவில் எதிர்வரும் 5 வருடங்களுக்குள் 40 சினிமா திரை அரங்கு வளாகங்களை 15 முக்கிய சவுதி அரேபிய நகரங்களில் அமைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
The Development and Investment Entertainment Company (DIEC), என்ற சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியத்தின் கீழ் இயங்கும் கம்பனியுடன் அமெரிக்காவின் AMC நிறுவனமும் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
சவுதி அரேபியாவின் சனத்தொகையில் 30% வீதமானவர்கள் 35 வயதுக்கு குறைந்தவர்கள் எனவும் அவர்களை இலக்கு வைத்தே இந்த சினிமா அரங்குகள் அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் மிகப்பெரிய திரை அரங்கு சங்கிலித்தொடரை கொண்டது AMC நிறுவனமாகும்.
எதிர்வரும் 5 வருடங்களில் 40 திரை அரங்கு வளாகங்களை அமைக்க திட்டம்..
Reviewed by nafees
on
09:51
Rating:
இவன் எஹூதிகளின் கையாள். இருதியில் சவூதியையே தாரைவார்த்து விடுவான்.
ReplyDeleteDivine punishment will increase by many times like this
ReplyDelete