கரடி தாக்குதலுக்கு உள்ளாகி நஸார்தீன் (42) மற்றும் எம்.நபீல் (24) படுகாயம்.
(அப்துல்சலாம் யாசீம்)
கன்தளாய் 97ம் கட்டை பழக்கடைக்கருகில் கரடி தாக்குதலினால் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் இன்று (05) காலை கன்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் தம்பலகாமம்,சிறாஜ் நகரைச்சேர்ந்த எம்.நஸார்தீன் (42வயது) மற்றும் எம்.நபீல் (24வயது) எனவும் தெரியவருகின்றது.
கடந்த சில தினங்களாக கன்தளாய் பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லையினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வீடுகளில் வளர்த்து வந்த நாய்க்குட்டிகள் காணாமல் போய் வந்திருந்த நிலையில் அந்நாய்குட்டிகளை சிறுத்தைகள் கொண்டு செல்வதாக கண்டறியப்பட்டது.
இதேவேளை இன்றைய தினம் கன்தளாய் பிரதான வீதி 97ம் கட்டைப்பகுதிக்குள் கரடித்தாக்குதலும் இடம் பெற்றுள்ளது.
கொடிய விலங்குகளான யானை ,சிறுத்தை மற்றும் கரடி போன்றவற்றின் வருகையினால் அப்பகுதிமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
வனவிலங்குகளின் தொல்லைகள் குறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எது வித நடவடிக்கையும் எடுக்கவுில்லையெனவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
No comments: