35 இலட்சம் பெறுமதியான ஹஸீஸ் உடன் பெண் கைது.


35 இலட்சம் பெறுமதியான ஹஸீஸ் ​​போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜையான பெண் ஒருவர்
கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

31 வயதான குறித்தப் பெண் நேற்று மாலை 5.10 மணியளவில் டில்லியிலிருந்து இந்திய விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ.ஐய். 281 விமானம் மூலம் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, குறித்தப் பெண் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் GREEN  CHANEL என்ற பகுதியூடாக சந்தேகத்திற்கிடமான முறையில் வெளியேற எத்தனித்தப் ​போதே, சுங்க அதிகாரிகளால்  சோதனையிடப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரின்  பயணப் பொதியிலிருந்து  8 கிலோ கிராம் ஹஸீஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.


35 இலட்சம் பெறுமதியான ஹஸீஸ் உடன் பெண் கைது. 35 இலட்சம் பெறுமதியான ஹஸீஸ் உடன் பெண் கைது. Reviewed by nafees on 22:54 Rating: 5

No comments:

Powered by Blogger.