விபத்தில் சிக்கிய 35 பெண்கள்... புத்தளம் - சிலாபம் பிரதான வீதியில்.

புத்தளம் - சிலாபம் பிரதான வீதியில் ஆராச்சிகட்டு - ஹலம்பவட்டவன பிரதேசத்தில்
இடம்பெற்ற வாகன விபத்தில் 35 பெண்கள் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை இந்த விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆடை தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றி சென்ற பேருந்தொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது பேருந்தில் சுமார் 40 பெண் பணியாளர்கள் அளவில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த பெண்கள் சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஆராச்சிகட்டு காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
விபத்தில் சிக்கிய 35 பெண்கள்... புத்தளம் - சிலாபம் பிரதான வீதியில்.
Reviewed by nafees
on
22:38
Rating:
Reviewed by nafees
on
22:38
Rating:
No comments: