இலங்கைக்கு வரும் சுற்­றுலாப் பய­ணிகளை பாதுகாக்க 30 மில்­லியன் ரூபா நிதி அரசால் ஒதுக்­கப்­பட்­டது.


சுற்­றுலா பொலிஸ் அபி­வி­ருத்­திக்­காக 30 மில்­லியன் ரூபா நிதி அரசால் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிதி­யா­னது
எதிர்­வரும் காலங்­களில் அனைத்து சுற்­றுலா பிர­தே­சங்­க­ளிலும் பாது­காப்பு அரண்­கள் நிர்­மா­ணத்­திற்கு பயன்­ப­ட­வுள்­ள­தாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார்.

கடந்த 8 ஆம் திக­தி­ய­ளவில் மிரிஸ்ஸ சுற்­றுலா கடற்­ப­கு­தியில் வைத்து நெதர்லாந்து நாட்டு பெண் ணொ­ருவர் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு முகங்­கொ­டுத்­தமை மற்றும் நெதர்லாந்து மற் றும் இஸ்ரேல் பிர­ஜைகள் நால்வர் தாக்­கப்­பட்ட சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றி­ருந்­தது. இதனால் சுற்­று­லாத்­து­றைக்கு ஏற்­பட்­டுள்ள பின்­ன­டைவை வெற்றி கொள்­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­களை தெளி வு­ப­டுத்தும் ஊடக மாநாடு நேற்று சுற்­றுலா அபி­வி­ருத்தி அதி­கார சபையில் இடம்­பெற்­றது.

இதன்­போது, கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கை யில்,  அண்­மையில் மிரிஸ்­ஸவில் நடந்த நிகழ்வு குறித்து நாம் கவ­லை­ய­டை­கின்றோம். குறி த்த பிர­தே­சத்தில் பாது­காப்புபை பலப்­ப­டுத்­தி­யி­ருக்­கா­மையே இப்­பி­ரச்­சினை தீவி­ர­ம­டைய கார­ண­மாக கூறப்­ப­டு­கின்­றது. இந்­நி­லை­மையை மாற்­றி­ய­மைக்க வேண்­டிய திட்­டங்  க­ளையே தற்­போது நிறை­வேற்றி வரு­கின்றோம்.

பொலிஸ் துறையை பலப்­ப­டுத்த வேண்­டிய நட­வ­டிக்­கைகள் தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அவற்­றுடன் குறித்த பிர­தே­சங்­களில் காணப்­படும் ஹோட்­டல்­களின் தர ங்கள் குறித்தும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப் பட்­டுள்­ளது.

அவற்­றுடன் நாட்டில் காணப்­படும் அநா­வ­சி­ய­மான கட்­டடத் தொகு­திகள் குறித்து உரிய கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது. அவற் றில் அநா­வ­சி­ய­மான கட்­ட­டத்­தொ­குதி அழிக் கப்­ப­டு­வ­தற்­கான சட்ட முறை­யொன்று குறித் தும் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.  மேலும் வழக்கு விசா­ர­ணை­களை துரி­தப் ப­டுத்­து­வ­தற்­கான விசேட நீதி­மன்­றங்­களை அதி­க­ரிப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அதேபோல், பொலி­ஸாரில் சுற்­ றுலா பொலிஸ் துறையை பலப்படுத்துவ தற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்ப டுகின்றது. இந்த வகையில், சுற்றுலா பிரதே சங்களை மையப்படுத்தி இராணுவ மற்றும் கடற்படையினரையும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கு வரும் சுற்­றுலாப் பய­ணிகளை பாதுகாக்க 30 மில்­லியன் ரூபா நிதி அரசால் ஒதுக்­கப்­பட்­டது. இலங்கைக்கு வரும் சுற்­றுலாப் பய­ணிகளை பாதுகாக்க 30 மில்­லியன் ரூபா நிதி அரசால் ஒதுக்­கப்­பட்­டது. Reviewed by nafees on 00:46 Rating: 5

No comments:

Powered by Blogger.