இந்தியா, இலங்கைக்கு 290 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி



இந்தியா, இலங்கைக்கு 290 கோடி அமெரிக்க டொலர்களை வழங்க முன் வந்துள்ளது.


இதில் 55 கோடி அமெரிக்க டொலர் நன்கொடையாக வழங்கப்பட இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சந்து தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற சுஜாதா ஜயவர்த்தன நினைவு தின நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

ஆனால் இந்தியா ஆக்கிரமிப்பு நோக்குடன் இலங்கைக்கு உதவிகளை வழங்குவதில்லை என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் இளம் சந்ததியினர் நெருக்கடிகளைக் கண்டு சளைக்காது சிறந்த எதிர்காலம் தொடர்பாக நம்பிக்கை வைத்துள்ளார்கள் வன்முறைகளுக்கு முடிவு கட்டி இலங்கை மக்கள் சமாதானத்தின் நன்மைகளை அனுபவிக்கிறார்கள். ஆளனி அபிவிருத்தியில் இலங்கை முன்னிலை வகிக்கிறது. 

இந்தியா, இலங்கைக்கு 290 கோடி அமெரிக்க டொலர்களை வழங்க முன் வந்துள்ளது. இதில் 55 கோடி அமெரிக்க டொலர் நன்கொடையாக வழங்கப்பட இருக்கின்றன. ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்காக அன்றி இலங்கையின் தேவையை உணர்ந்தே இந்தியா இலங்கைக்கு உதவி வழங்குகின்றது. இலங்கை மாணவர்களுக்கு இந்தியா 750 புலமைப்பரிசில்களை வழங்குகிறது என்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சந்து மேலும கூறினார்.
இந்தியா, இலங்கைக்கு 290 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி இந்தியா, இலங்கைக்கு 290 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி Reviewed by nafees on 09:55 Rating: 5

No comments:

Powered by Blogger.