2.8 சதவீதமாக பணவீக்கம் குறைவடைந்துள்ளது ; மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவிப்பு
கடந்த பெப்ரவரி மாதம் 3.2 சதவீதமாக இருந்து மார்ச் மாதம் 2.8 சதவீதமாக பணவீக்கம் குறைவடைந்துள்ளதாக தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் உணவு மற்றும் உணவல்லாப் பிரிவுகளிலிருந்து பணத்திற்கான பங்களிப்புக்கள் முறையே 1.2 சதவீதம், 1.6 சதவீதமாக இருந்தது. அதேவேளை 8.6 சதவீதம் முதன்மைப்பணவீக்கத்தின் பெறுபேறாக 2017 மார்ச் மாதத்தில் பணவீக்கத்திற்கான இந்த இரு பிரிவுகளினதும் பங்களிப்புக்கள் முறையே 4.9 சதவீதம் மற்றும் 3.8 சதவீதமாக காணப்பட்டன.
தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் மாதம் மீது மாத மாற்றங்களை ஒப்பிடுகையில் 2018 பெப்ரவரி மாதத்தில் பதிவாகிய 123.7 இலிருந்து 2018 மார்ச் மாதத்தில் 122.8 குறைவடைந்துள்ளது. இது பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.9 சுட்டெண் புள்ளி அதாவது 0.7 சதவீத புள்ளி குறைவாகும்.
இதற்கான காரணம் உணவுப்பொருட்களின் செலுப்பெறுமதி 0.80 சதவீதத்தால் குறைவடைந்தமையும் உ ணவல்லாப்பொருட்களின் செலவுப்பெறுமதி 0.08 சதவீதத்தால் அதிகரித்தமையும் பிரதான காரணம் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2.8 சதவீதமாக பணவீக்கம் குறைவடைந்துள்ளது ; மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவிப்பு
Reviewed by nafees
on
00:46
Rating:

No comments: