ஹுலுகங்கை ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது. ரத்மலானையை சேர்ந்த எஸ். ஹுஸ்னியா (23) உட்பட...

-ஜே.எம்.ஹபீஸ்-
பன்விலைப் பிதேசத்தில் நீரில் மூழ்கி மரணித்தவர்களது சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கண்டி பன்விலை ஹுலுகங்கையில் நீராடச்சென்ற ஐந்து பேர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதுடன் அவர்களுல் நால்வருடை சடலங்களும் பின்னர் ஒருவரது சடலமும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலீஸார் தெரிவித்தனர்.
கொழும்பு ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரியும் இவர்கள் சுற்றுலாவுக்காக கண்டி பிரதேசத்திற்கு வந்துள்ளதுடன் (7.4.2108) இங்கு நீராடச் சென்றுள்ளதாகவும் திடீரென ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்ததன் காரணமாக இவர்கள் நீரில் அடித்துச் சென்றுள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மரணித்தவர்களில் மூன்று பெண்களும் இரு ஆண்களும் அடங்குவர்.
கண்டி அம்பிட்டிவை சேர்ந்த சிரிஸ் அன்திரியா(26), மொரட்டுவையச் சேர்ந்த கஜனா சிவநாதன்(26), இரத்மலானையை சேர்ந்த எஸ். ஹுஸ்னியா (23), கனேமுல்லையசேர்ந்த மஞ்சுல சுசில் (30), கிரிந்திவெலயை சேர்ந்த பிரியங்க பிரேம குமார ஆகியோரே இவ்வாறு மரணித்துள்ளதாக பொலீசார் கருதுவதாகப்பொலீசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களுடைய சடலங்கள் தற்போது கண்டிவைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகள் நடைபெற உள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.
பன்விலை பொலீஸார் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.
ஹுலுகங்கை ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது. ரத்மலானையை சேர்ந்த எஸ். ஹுஸ்னியா (23) உட்பட...
Reviewed by nafees
on
22:18
Rating:
Reviewed by nafees
on
22:18
Rating:
No comments: