இரண்டரை கோடி ரூபா பெறுமதியான 220 கிலோ கேரளா கஞ்சா வேனுடன் சிக்கியது.

220 கிலோ கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்றை, இன்றைய தினம் (05) பொலிஸார் சோதனையிட்ட போதே, குறித்த வானின் சாரதியான சந்தேகநபரிடமிருந்து கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.
பங்கதெனிய பிரதேசத்தில் கேரளா கஞ்சாவை விநியோகத்திற்காக வாகனத்தில் கொண்டு செல்லும் போது சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் பெறுமதி சுமார் இரண்டரை கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
இரண்டரை கோடி ரூபா பெறுமதியான 220 கிலோ கேரளா கஞ்சா வேனுடன் சிக்கியது.
Reviewed by nafees
on
04:10
Rating:
Reviewed by nafees
on
04:10
Rating:
No comments: