மின் கம்பத்தில் மோதி, 22 வயது இளைஞர் பலி.


வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கிளிநொச்சி இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் 22 வயதுடைய சாந்தவேலு ரொகான் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

A-9 வீதியூடாக கிளிநொச்சி நோக்கி குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியுள்ளது.

இதனையடுத்து, குறித்த இளைஞன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ள நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மின் கம்பத்தில் மோதி, 22 வயது இளைஞர் பலி. மின் கம்பத்தில் மோதி,  22 வயது இளைஞர் பலி. Reviewed by nafees on 03:16 Rating: 5

No comments:

Powered by Blogger.