நானே ஒரு ஜோதிடர் என்ற ரீதியில் கூறுகிறேன்.. மைத்திரிபால சிறிசேன 2028 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் இருப்பார்.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் நீடித்திருக்கும்.
அவர் 2028 ஆம் ஆண்டு வரை பதவியில் இருப்பார் அவருக்கு இணையாக எவரும் தற்போது இல்லை.

இதை நான் ஜோதிடர் என்ற ரீதியில் கூறமுடியும் என்று சப்ரகமுவ மாகாண புதிய ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண புதிய ஆளுநராக நியமிக்கப்பட் டுள்ள நிலுக்கா ஏக்கநாயக்க நேற்று இரத்தினபுரியில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத் தொகுதியில் தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை திட்டத்தின் கீழ் சப்ரகமுவ மாகாண மக்களுக்கு சரி யான முறையில் சேவை செய்வதற்கு நான் நடவ டிக்கை எடுப்பேன்.


சப்ரகமுவ மாகாண மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அதிகாரிகள் கூடிய ஒத்து ழைப்பை வழங்க வேண்டும். மக்களை ஏமாற்ற முயலும் கள்வர்களுக்கு நாட்டில் ஒருபோதும் இட மில்லை .


சப்ரகமுவ மாகாண ஆளுநராக பதவி வகித்த மார்ஷல் பெரேரா மனிதநேயம் கொண்டவர். அவர் சப்ரகமுவ மாகாண மக்களுக்கு நீதியான முறையில் சேவையாற்றியுள்ளார். அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

சப்ரகமுவ மாகாண சபை தற்போது கலைக்கப்பட் டுள்ள நிலையில் அதன் தலைவர் காஞ்சன ஜயரத்ன தொடர்ந்து சப்ரகமுவ மாகாண சபை தலைவராக கடமையாற்றி வருகின்றார். அவருடன் இணைந்து கட்சி பேதங்களின்றி மக்களுக்கு நீதியான முறையில் சேவை செய்வதே எனது எதிர்பார்ப்பாகும் என்றார்.


நிகழ்வில் சர்வமத குருமார்கள் மற்றும் சப்ரகமுவ மாகாண சபை தலைவர் காஞ்சன ஜயரத்ன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான நந்த மித்ர ஏக்கநாயக்க, சப்ரகமுவ மாகாண முன்னாள் அமைச்சர் அதுலகுமார ராகுபந்த, மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன, ஆளுநரின் செயலாளர் லலித் தொடங்கொட்டுவ, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலணி லொக்கு போதாகம், ஆளுநரின் இணைப்பு செயலாளர் துமிந்த குணவர்தன மற்றும் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் பணிப்பா ளர்கள், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட் பட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நானே ஒரு ஜோதிடர் என்ற ரீதியில் கூறுகிறேன்.. மைத்திரிபால சிறிசேன 2028 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் இருப்பார். நானே ஒரு ஜோதிடர் என்ற ரீதியில் கூறுகிறேன்.. மைத்திரிபால சிறிசேன 2028 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் இருப்பார். Reviewed by nafees on 01:18 Rating: 5

No comments:

Powered by Blogger.