2025 ல் நாட்டின் தலைவராகும் யோகம் ; சஜித்தின் ஆஸ்தான ஜோதிடர்கள் அறிவுரை ..

2025 ஆம் ஆண்டிலேயே நாட்டின் தலைவராகும் யோகம் இருப்பதாக சஜித் பிரேமதாசவுக்கு அவரது
ஆஸ்தான் ஜோதிடர்கள் கூறியுள்ளதாக அவருக்கு மிக நெருக்கமான வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன.
ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் அதற்கு மறுப்பு வெளியிட்டு வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
கட்சி தலைமையை ஏற்றுக்கொண்டு 2025 இல் தான் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்ட அவரது ஆஸ்தான ஜோதிடர்களுக் 2025 க்கு பின்னர் அவர் நாட்டின் தலைவராக வருவதற்குறிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
2025 ல் நாட்டின் தலைவராகும் யோகம் ; சஜித்தின் ஆஸ்தான ஜோதிடர்கள் அறிவுரை ..
Reviewed by nafees
on
03:13
Rating:
No comments: