2020 இன் வெற்றி இப்பொழுதே உறுதி செய்யப்பட்டுவிட்டது.


எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு அர­சியல் வெற்றி இலக்கை அடை­வ­தற்­கான பய­ணத்தை ஆரம்­பிக்க நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை முக்­கிய திருப்­பு­மு­னை­யாக அமைந்­தது என தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க, நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கிய உறு­தி­மொ­ழி­களை ஒருபோதும் மறக்­கப்­போ­வ­தில்லை.

அவற்றை நிறை­வேற்­று­வ­தற்­கான பய­ணத்தை ஆரம்­பிக்க உள்ளோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைமை காரி­யா­ல­ய­மான சிறி­கொத்­தாவில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையின் வெற்­றி­யினை கொண்­டாடும் வகையில் நேற்று இடம்­பெற்ற வர­வேற்பு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரை­யாற்­றிய போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்

ஐக்­கிய தேசிய கட்சி பலம் வாய்ந்த கட்சி என்­பதை பாரா­ளு­மன்­றத்­தினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் உறுப்­பி­னர்கள் நிரூ­பித்து விட்­டனர். நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையின் வெற்றி கூட்டு எதிர்க்­கட்­சிக்கு பாரிய பதி­ல­டி­யாக காணப்­ப­டு­கின்­றது. தேசிய அர­சாங்கம் மக்­க­ளுக்கு முன்­வைத்த வாக்­கு­று­தி­களை ஒரு­போதும் மறக்­கப்­போ­வ­தில்லை. உள்­ளு­ராட்சி மன்ற தேர்­தலில் நாட்டு மக்கள் தேசிய அர­சாங்­கத்­திற்கு எதி­ராக செயற்­ப­ட­வில்லை. எப்­படி செயற்­பட வேண்டும் என நினை­வுப்­ப­டுத்­தினர். மக்­க­ளுக்­காக பாரிய மாற்­றங்­களை ஐக்­கிய தேசிய கட்சி ஏற்­ப­டுத்தும்.

எனக்கு எதி­ராக கூட்டு எதிர்­கட்­ச­யினர் கொண்டு வந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை எனக்கு எதி­ரா­னது மட்­டு­மல்ல தேசிய அர­சாங்­கத்­திற்கும் நல்­லாட்­சிக்கும் எதி­ரா­ன­தா­கவே காணப்­பட்­டது. கட்­சியில் காணப்­பட்ட ஒரு சில குறை­களை மையப்­ப­டுத்தி சில விச­மிிகள் கட்­சிக்குள் பிள வினை ஏற்­ப­டுத்த முற்­பட்­டனர். அவர்­களின் முயற்­சிகள் தற்­போது தோல்­வி­ய­டைந்­துள்­ளன.

ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் மறு­சீ­ர­மைப்­பினை மேற்­கொள்­வது தற்­போது பெற்றுக் கொண்ட வெற்­றியின் பிர­தான தேவை­யாக காணப்­ப­டு­கின்­றது. கட்சி உறுப்­பி­னர்கள் ஒற்­று­மை­யுடன் செயற்­பட்டால் எதிர்­வரும் 2020ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லிலும் பாரிய வெற்­றி­யினை பெற­மு­டியும். தேசிய அர­சாங்­கத்­தினை முழு­மை­யாக அழிப்­பதே கூட்டு எதிர்க்­கட்­சியின் பிர­தான நோக்­க­மாக காணப்­ப­டு­கின்­றது.

ஜனா­தி­பதி தேர்­தலின் போது நாட்டு மக்­க­ளுக்கு ஐக்­கிய தேசிய கட்சி முன்­வைத்த வாக்­கு­று­தி­களை கட்­சியின் தலைவர் என்ற ரீதியில் ஒரு­போதும் மறக்­க­போ­வ­தில்லை. இரண்டு பிர­தான கட்­சி­களும் தேசிய அர­சாங்­க­மாக இணைந்து செயற்­படும். தேசிய அர­சாங்­கத்தில் காணப்­ப­டு­கின்ற சில குறை பாடு­களை எதிர்­த­ரப்­பினர் தமக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்டு அர­சாங்­கத்­திற்கு தொடர்ந்து அழுத்­தங்­களை பிர­யோ­கித்து தேசிய கொள்­கை­க­ளுக்கு இழுக்­கினை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

இந்த கிழ­மைக்குள் கட்­சியின் மறு­சீ­ர­மைப்­பினை மேற்­கொண்டு மக்­களின் அபி­லா­சை­க­ளுக்கு ஏற்ப நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டின் நிர்­வா­கத்­தினை மேற்­கொள்ளும்.. நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யினை பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வந்­த­மைக்கு கூட்டு எதி­ர­ணி­யி­ன­ருக்கு நன்­றி­களை கூற வேண்டும் ஏனெனில் பெறப்­பட்ட வெற்­றியின் பின்­னரே கட்சி மேலும் வலு­வ­டைந்­துள்­ளது.

2020ஆம் ஆண்டு வரை தேசிய அர­சாங்கம் தொடர்ந்தும் செயற்­படும். நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த உறுப்­பி­னர்­களை ் நீக்­கு­மாறு கட்­சியின் பெரும்­பான்மை உறுப்­பி­னர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ் கலந்துரையாடலினை மேற்கொண்டதன் பின்னர் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

பெறப்பட்டுள்ள வெற்றியினை நாட்டுமக்கள் கொண்டாடி வருகின்றனர். மக்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், கட்சி பேதமின்றி ஆதரவினை வழங்கிய பாராளுமன்ற உறுப்பிணர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
2020 இன் வெற்றி இப்பொழுதே உறுதி செய்யப்பட்டுவிட்டது. 2020 இன் வெற்றி இப்பொழுதே  உறுதி செய்யப்பட்டுவிட்டது. Reviewed by nafees on 22:24 Rating: 5

1 comment:

  1. அழுத்கமவில் மஹிந்த கொஞ்சம் கொடுத்து போனாரு இவரு திகனயில் வட்டியும் முதலுமா கொடுத்தாரு இனி 2020 பிறகு இன்னும் ஏது குறையா வைத்து சென்று இருந்தால் அது எல்லாம் பெற தயாரா இவருக்கு வாக்கு அளிக்கவும்.

    ReplyDelete

Powered by Blogger.