2015ஆம் ஆண்டு மக்கள் ஆணையைப் பாதுகாக்க வேண்டிய கடமை சகலருக்கும் இருக்கிறது.



"பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடையச் செய்து,
2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான போரைத் தொடங்குவோமென" கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரேரணையை தோல்வியடைச் செய்வதற்கு யாரும் எதிர்பார்க்காத, சக்திகள் ஒன்றிணையும் எனவும் அவர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
“2015ஆம் ஆண்டு மக்கள் ஆணையைப் பாதுகாக்க வேண்டிய கடமை சகலருக்கும் இருக்கிறது, தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தவர்கள், தங்களுடைய வெறுப்புகளைக் காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றனர்” எனவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு மக்கள் ஆணையைப் பாதுகாக்க வேண்டிய கடமை சகலருக்கும் இருக்கிறது.  2015ஆம் ஆண்டு மக்கள் ஆணையைப் பாதுகாக்க வேண்டிய கடமை சகலருக்கும் இருக்கிறது. Reviewed by nafees on 07:43 Rating: 5

No comments:

Powered by Blogger.