200 மில்லியன் ரூபாய்ப் பணத்தை மோசடி செய்தவரை கண்டுபிடிக்க உதவவும்.

200 மில்லியன் ரூபாய்ப் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காக பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
புத்கமுவ, ராஜகிரிய பகுதியில் வசிக்கும் சன்ஜீவ டீ சில்வா பண்டிதசேகர என்ற சந்தேகநபர் குறித்து, தகவல் தெரிந்தவர்கள், பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் தெரியவருமாயின், பொதுமக்கள் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் 011 2395248 என்ற தொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு, பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
200 மில்லியன் ரூபாய்ப் பணத்தை மோசடி செய்தவரை கண்டுபிடிக்க உதவவும்.
Reviewed by nafees
on
01:12
Rating:
Reviewed by nafees
on
01:12
Rating:
No comments: