சேதமடைந்து, இழுத்துச் செல்லபட்ட முச்சக்கரவண்டியில் மோதி 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.

களுத்துறை - போம்புவல வீதியின் கர்மான்தபுரய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி ஒன்றை இன்னொரு முச்சக்கர வண்டியின் துணையுடன் எடுத்துச்செல்லும் போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த நபரை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அவர் உயிரிழந்துள்ளார்.
களுத்துறை, நாகொட பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் இரண்டு முச்சக்கர வண்டி ஓட்டுனர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேதமடைந்து, இழுத்துச் செல்லபட்ட முச்சக்கரவண்டியில் மோதி 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.
Reviewed by nafees
on
22:54
Rating:
Reviewed by nafees
on
22:54
Rating:
No comments: