இஸ்ரேலின் தாக்குதல்.. மேலும் 16 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர். 250 பேர் காயம்.


இஸ்ரேல் எல்லையில்,  இஸ்ரேல் படைப்பிரிவுகள் நடத்திய தாக்குதலில் 16 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 250க்கும் மேலானோர் காயமடைந்ததாகவும் பாலத்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலஸ்தீனம் - இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் அமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டு இஸ்ரேல் அரசுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர். அவர்களை இஸ்ரேல் படையினர் தடுக்க முயற்சித்தனர்.

ஆனால், போராட்டக்காரர்களை தடுக்கும் முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் இஸ்ரேல் படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும், பலஸ்தீனர்கள் வசிப்பிடங்களை நோக்கி குண்டு வீசியும் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

இந்த தாக்குதலில் 7 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கடந்த ஒரு வாரத்தில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
அதைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது
இஸ்ரேலின் தாக்குதல்.. மேலும் 16 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர். 250 பேர் காயம். இஸ்ரேலின் தாக்குதல்.. மேலும் 16 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர். 250 பேர் காயம். Reviewed by nafees on 23:16 Rating: 5

No comments:

Powered by Blogger.