நுழைவுச்சீட்டுக்கள் 15 நிமிடங்களில் விற்பனை செய்து சாதனை..




சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்கான தடை நீக்கப்பட்ட பின்னர் சவுதி அரேபியோவின் தலைநகர் ரியாத் நகரில் முதன்முதலாக கட்டிமுடிக்கப்பட்ட முதல் திரையரங்கில் முதல்நாள் முதல் காட்சிக்கான நுழைவுச்சீட்டுக்கள் 15 நிமிடங்களில் விற்பனைசெய்யபட்டுள்ளன.

கடந்த புதன்கிழமை திறக்கப்பட்ட இந்த திரையரங்கில் ஹாலிவூட் திரைப்படமான 'பிளாக் பான்தர்ஸ்' முதல் படமாக திரையிடப்பட்டது.


இந்த படத்தின் முதல்நாள் முதல் காட்சிக்கான அனைத்து நுழைவுச்சீட்டுக்களும் முதல் 15 நிமிடங்களில் இணையத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மற்ற காட்சிகளும் 'ஹவுஸ் புல்' ஆக ஓடிக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


சவுதி அரேபியா அரசாங்கம் கடந்த 35 ஆண்டுகளாக சினிமாக்களை திரையிட தடை விதித்தது.


இஸ்லாமிய கலாச்சரத்தையும் மத அடையாளத்தையும் சினிமா சீர்குலைத்து விடும் என்று அங்குள்ள மத தலைவர்கள் கருதியதால் சவூதி அரேபியாவில் 1980ஆம் ஆண்டு திரைப்படம் தடை செய்யப்பட்டது. இந்த தடை நீக்கப்படாமல் இருந்தது. சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் மேற்கொண்டுவரும் திருத்தங்களின் ஒரு நடவடிக்கையாக மீண்டும் அந்நாட்டில் சினிமா திரையரங்குகள் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு இசைக் குழுக்களின் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் ஒருகட்டமாக சினிமா திரையிடல் மீது விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசாங்கம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீக்கியது.


சினிமா தணிக்கை குழு அமைக்கவும் புதிய திரையரங்கங்களை திறக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது சவுதி அரேபியாவின் கலைசார்ந்த பொருளாதாரத்தின் புதிய அத்தியாயமாக இருக்கும் என்று அந்நாட்டின் தகவல் தொடர்புத்துறை மந்திரி அவாத் அல்அவாத் குறிப்பிட்டார்.

 

எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் 15 நகரங்களில் 40 சினிமா திரையரங்குகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.


எதிர்வரும் 2030-ம் ஆண்டுக்குள் 2000 திரையரங்குங்கள் கொண்ட 300 வளாகங்களை கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் 30 ஆயிரம் பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நுழைவுச்சீட்டுக்கள் 15 நிமிடங்களில் விற்பனை செய்து சாதனை.. நுழைவுச்சீட்டுக்கள் 15 நிமிடங்களில் விற்பனை செய்து சாதனை.. Reviewed by nafees on 11:08 Rating: 5

No comments:

Powered by Blogger.