15 வயது மாணவனை, 50 வயது ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கு நேற்று பதுளை நீதிமன்றில்...

ஹாலிஎல பாடசாலையில் தனது மாணவர்களில் ஒருவரை ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம்
செய்ததாக குற்றம் சாட்டிய வழக்கு ஒன்று பதுளை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (ஏப்ரல் 24) விசாரணைக்கு வந்தது.
இந்த சம்பவம் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் போலீசில் முறையான புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவரும் ஆசிரியையும் முன்னர் மன நல சோதனையில் ஈடுபடுத்தபட்டனர்.
மாணவரின் பெற்றோரின் கூற்றுப்படி, 50 வயதான ஆசிரியை பள்ளியில் ஒரு விழா நடந்த காலத்தில் 15 வயது தமது மகனை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய மேலும் விசாரணை செய்ய வேண்டும் எனவும், கைது செய்யப்பட்ட ஆசிரியை ஒரு இலட்சம் ரூபா பிணையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும்,
இந்த வழக்கு மீண்டும் மே 04 இல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கபடுகிறது.
15 வயது மாணவனை, 50 வயது ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கு நேற்று பதுளை நீதிமன்றில்...
Reviewed by nafees
on
22:10
Rating:
Reviewed by nafees
on
22:10
Rating:
No comments: