கொம்மன் வெல்த் போட்டியில் கலந்துகொள்ள சென்ற 13 ஆபிரிக்க நாட்டு வீரர்கள் அவுஸ்திரேலியாவில் 'எஸ்கேப்'

உலகின் 3-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பொதுநலவாய விளையாட்டு போட்டி அவுஸ்திரேலியாவின்
கடற்கரை நகரான கோல்ட்கோஸ்டில் இடம்பெற்று வருவது அறிந்ததே..
இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த போட்டியில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள நிலையில் இப்போட்டிகளில் கலந்துகொள்ள வந்த 13 ஆபிரிக்க நாட்டு வீரர்கள் போட்டியில் இருந்து வெளியேறி அவுஸ்திரேலிய நாட்டில் ஒளிந்து விட்டதாக தெரிவிக்கபடுகிறது.
இவர்களில் எட்டு பேர் கெமரூன் நாட்டையும் ஐந்து பேர் ருவண்டா & உகண்டா நாட்டையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
கொம்மன் வெல்த் போட்டியில் கலந்துகொள்ள சென்ற 13 ஆபிரிக்க நாட்டு வீரர்கள் அவுஸ்திரேலியாவில் 'எஸ்கேப்'
Reviewed by nafees
on
23:25
Rating:
Reviewed by nafees
on
23:25
Rating:
No comments: