புதுவருட தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 12 பேர் உயிரிழந்ததோடு, 69 பேர் காயம்.


புதுவருட தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 12 பேர் உயிரிழந்ததோடு,  69 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றர்.

சனிக்கிழமை மாலை 6 மணிமுதல், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரையான 12 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துகளில் 22 பேர் படுகாயமடைந்ததோடு, 47 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

17 விபத்துகளினால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்தக்காலப்பகுதியில் குடிபோதையில் வாகனத்தை செலுத்திய 140 சாரதிகள் கைது செய்யப்பட்டதோடு, 166 சாரதிகள் மீது வாகனத்தை வேகமாக செலுத்தியமை தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, விதிகளை மீறி வாகனத்தை செலுத்திய 22 சாரதிகள் தொடர்பிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

செய்தியில் உள்ள படங்களில்.. இன்று காலை ஹம்பாந்தோட்டை - அம்பலாந்தோட்டை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து. இதில் தாய் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் கடும் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.
புதுவருட தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 12 பேர் உயிரிழந்ததோடு, 69 பேர் காயம். புதுவருட தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 12 பேர் உயிரிழந்ததோடு,  69 பேர் காயம். Reviewed by nafees on 08:39 Rating: 5

No comments:

Powered by Blogger.