மத்தலையில் பிளை டுபாய் விமானத்தில் மோதிய பறவை. ( 113 பயணிகளுடன்...)

கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து மத்தள ஊடாக டுபாய் செல்லவிருந்த FZ 551 ரக
விமானமான பிளை டுபாய் விமானத்தின் இடது பக்கம் பறவை ஒன்று மோதியதால், குறித்த விமானம் மத்தள விமானநிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து 113 பயணிகளுடன் மத்தளைக்கு சென்ற விமானம் அங்கிருந்த 55 பயணிகளையும் ஏற்றிக்கொண்டு டுபாய்க்கு செல்ல தயாராகவிருந்தது.
எனினும், குருவி மோதியதால், காலை 7.11 இலிருந்து விமானம் மத்தளை விமானநிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
டுபாய் செல்வதற்கு கட்டுநாயக்கவில் இருந்து விமானத்தில் ஏறிய 113 பயணிகளும், மத்தளை விமானநிலையத்தில் இருந்த 55 பயணிகளும் தொடர்ந்து மத்தளை விமானநிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு போதிய வசதிகள் இன்மையால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மத்தலையில் பிளை டுபாய் விமானத்தில் மோதிய பறவை. ( 113 பயணிகளுடன்...)
Reviewed by nafees
on
04:10
Rating:
Reviewed by nafees
on
04:10
Rating:
No comments: