10 மில்லியன் பெறுமதியான கடைக் காணியை பள்ளிவாசலுக்கு அன்பளிப்பு செய்த சாலி ஹாஜியார் .


ஏறாவூர் பிரதான வீதியில் -கார்கில்ஸ் பூட் சிட்டிக்கு எதிரில் உள்ள 10மில்லியன் பெறுமதியான கடைக்
காணியை - பிரபல தொழிலதிபரும் சமூக சேவகருமான சாலி ஹாஜியார் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களுமாக இணைந்து இன்று ஏறாவூர் ஓட்டுப்பள்ளி வாசலுக்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

குறித்த காணியை அன்பளிப்பு செய்யும் நிகழ்வு இன்று இஷாத் தொழுகையை தொடர்ந்து ஓட்டுப்பள்ளிவாசலில் சாலி ஹாஜியார் மற்றும் அவரின் குடும்பத்தினரின் பிரசன்னத்துடன் இடம்பெற்றது.

உள்ளக பகுதிகளில் பக்கத்து வீட்டானின் பயணத்திற்காய் பாதைக்கு என ஒரு அடி காணியை விட்டுக் கொடுக்காது முரண்டு பிடிப்போர் மத்தியில் பள்ளிவாசலின் அபிவிருத்திக்காய் ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள கோடி ரூபாய் பெறுமதியுள்ள காணியை அன்பளிப்பு செய்த சாலி ஹாஜியார் மற்றும் அவரின் குடும்பத்திற்கு அல்லாஹ் மென்மேலும் அபிவிருத்தியையும் , உடல் ஆரோக்கியத்தையும் வழங்குவதோடு, அவர்களின் தூய எண்ணத்துடனான பணிகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக....

(உரியவர்களால் பிரசுரிக்க வேண்டாம் என வலியுறுத்திக் கூறப்பட்ட போதும் , அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக ஊரில் இருக்க வேண்டும் என்பதற்காய் பதிவிடப்படுகிறது BY : முகம்மத் அஸ்மி 
10 மில்லியன் பெறுமதியான கடைக் காணியை பள்ளிவாசலுக்கு அன்பளிப்பு செய்த சாலி ஹாஜியார் . 10 மில்லியன் பெறுமதியான கடைக் காணியை பள்ளிவாசலுக்கு அன்பளிப்பு செய்த சாலி ஹாஜியார் . Reviewed by nafees on 10:32 Rating: 5

No comments:

Powered by Blogger.