கனடாவில் 10 பேர் பலியான தாக்குதல் / விபத்தில் இலங்கை பெண்னும் உயிரிழப்பு.

கனடாவின்  டொரோண்டோ பகுதியில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற  தாக்குதல் / விபத்தில்  
ஹொரண பகுதியை சேர்ந்த ரேனுகா அமரசிங்க என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேன் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்திருந்தன. 

இதில் இலங்கையை சேர்ந்த ரேனுகா அமரசிங்க என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தற்போது செய்திகள் வௌியாகியுள்ளன. 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வேனின் ஓட்டுனர் விபத்து ஏற்பட்ட உடனேயே அந்த இடத்தில் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்த போது பொலிஸார் அவரை விரட்டிப் பிடித்து கைது செய்து போலீசார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


சந்தேக நபர் 25 வயது  அலேக் மினஸ்சியன் என அறியப்படுவதுடன் ( Alek Minassian, 25) சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனத்தை பொதுமக்களை மோதியவாறு ஓட்டியுள்ளார். கீழே படத்தில் உள்ள நபர். 2017 ஆம் ஆண்டில் கனடா இராணுவத்தில் வாலண்டியராகவும் சில காலம் பணியாற்றி உள்ளார்.
கனடாவில் 10 பேர் பலியான தாக்குதல் / விபத்தில் இலங்கை பெண்னும் உயிரிழப்பு. கனடாவில் 10 பேர் பலியான தாக்குதல் / விபத்தில் இலங்கை பெண்னும் உயிரிழப்பு. Reviewed by nafees on 20:36 Rating: 5

No comments:

Powered by Blogger.