தரம் 1 இல் மாணவர்களை சேர்த்துக்கொள்வது தொடர்பான சுற்றுநிருபத்தில் சில மறுசீரமைப்புகள்

தரம் 1இல் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விதிமுறைகளில் திருதம் செய்ய கல்வி அமைச்சு முன்னெடுப்புக
ளை மேற்கொண்டுள்ளது.தரம் 1இல் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான தகவல்களை தொடர்ந்தும் ஒழுக்கவிதிமுறையுடன் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கல்வி அமைச்சில் சமீபத்தில் இடம்பெற்ற முன்னேற்ற மதிப்பீட்டுக்கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு தரம் 1இல் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான சுற்றறிக்கை குறித்தும் நடைமுறைகள் தொடர்பிலும் இதன்போது விரைவான முறையில் கலந்துரையாடப்பட்டது.
புள்ளிகள் வழங்கும் நடைமுறை மற்றும் தெரிவு செய்யப்படும் மாணவர் வதிவிடம் குறித்த தகவல்களை சமர்ப்பிப்பதில் பிரச்சனைகள் ஏற்படாதவகையில் பிள்ளைகளின் தகமைகள் தொடர்பிலான தகவல்களை பகிரங்கப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்துமாறும் அமைச்சர் இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
தரம் 1இல் மாணவர்களை உள்வாங்கும் பொழுது இடம்பெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுப்பதே இதன் நோக்கமாகும். போலியாக தயாரிக்கப்படும். ஆவணங்களை பயன்படுத்தி மாணவர்களை பாடசலைக்கு சேர்த்துக்கொள்வதற்காக பெற்றோர் முயற்சிப்பதன் காரணமாக தகுதிகளை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதேவேளை தரம் 1 இல் மாணவர்களை சேர்த்துக்கொள்வது தொடர்பான சுற்றுநிருபத்தில் சில மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தரம் 1 இல் மாணவர்களை சேர்த்துக்கொள்வது தொடர்பான சுற்றுநிருபத்தில் சில மறுசீரமைப்புகள்
Reviewed by nafees
on
00:44
Rating:
No comments: