UNP யின் போனஸ் பூச்சாண்டி ; மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்ட தர்கா நகர் முஸ்லிம்கள்..




பேருவளை பிரதேச சபையில் முஸ்லிம்களின் வாக்குகளை கொள்ளையிட்ட ஐக்கிய தேசி
கட்சி போனஸ் பட்டியலில் பெயரிடப்பட்ட முஸ்லிம்களை ஏமாற்றி நடுத்தெருவில் விட்டுள்ளாதாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2 இரட்டை வட்டாரங்கள் உட்பட  23 வட்டாரங்களைக் கொண்ட பேருவளை பிரதேச சபையில் முஸ்லிம்கள் செறிந்து வாழக்கூடியதும் முஸ்லிம்களை மட்டும் கொண்டதுமான தர்கா நகர் பிரதேசம் மூன்று தேர்தல் வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் , பேருவளை பிரதேச சபையில்  இரட்டை வட்டாரம் ஒன்றுடன் சேர்த்து 19 வட்டாரங்களை வெற்றிகொண்டு 20 உறுப்பினர்களை மொத்தமாக பொதுஜன பெரமுன வெற்றி கொண்டிருந்தது

பேருவளை பிரதேச சபையில் முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய இரட்டை வட்டாரம் ஒன்றுடன் சேர்த்து, முஸ்லிம்களுக்குரிய  மூன்று வட்டாரங்களைக் கொண்ட தர்கா நகரில் மூன்று உறுப்பினர்களை பெற்று வட்டார முறையில் மொத்தமாக ஐந்து உறுப்பினர்களை .தே.கா பெற்றுக்கொண்டது.

.தே.கா வெற்றி கொண்ட வட்டாரங்கள் முஸ்லிம்கள் செறிந்து வாழக்கூடிய வட்டாரங்களாகும்.முஸ்லிம்களின் வாக்குப் பலத்தினாலேயே .தே.கா ஓரளது தப்பித்துக் கொண்டது என்றே சொல்லவேண்டும்.

பேருவளை பிரதேச சபையில் எந்தவொரு வட்டாரத்தையும் வெற்றிகொள்ளாத ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஐந்து போனஸ் ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட போதும் அதில் இரண்டை தர்கா நகர் முஸ்லிம்களுக்கு வழங்கி அக்கட்சி முஸ்லிம்களை கண்ணியப்படுத்திய போதும்

முழு நாட்டிலும் சரி,பேருவளை பிரதேச சபையிலும் சரி முஸ்லிம்களது முழு பங்களிப்பால் மாத்திரம் தங்களது மானத்தைப் பாதுகாத்துக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சியானது பேருவளை பிரதேச சபையில் எட்டு ஆசனங்களை போனஸாகப் பெற்றுக் கொண்ட நிலையில்  ஒன்றையேனும் முஸ்லிம்களுக்கு வழங்காமல் பெரும்பான்மை சமூகத்திற்கே அனைத்தையும் வாரி வழங்கி வழமை போல மீண்டுமொரு முறை முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரான  இப்திகார் ஜெமீல் அவர்கள், தர்கா நகர் மேடைகளில் ஒவ்வொன்றிலும் தர்கா நகர் மக்களின் வாக்குகளினைப் பெறுவதற்காக, "தர்கா நகரின் மூன்று தொகுதிகளிலும் வாக்குகளைத் தாருங்கள்.தர்கா நகரில் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று இரண்டு போனஸ் ஆசனங்களைத் தருகிறேன்" என்று முழக்கமிட்டுருந்ததாக கூறப்படும் அதேவேளை,

சுயேட்சையில் இறங்க எத்தணித்த றிபான், ஹுனைப் எம் ஹனீப் ஆகியோர்களை அழைத்து "வாருங்கள் போனஸ் ஆசனம் தருகிறோம்" என்றழைத்து,தேசியப் பட்டியல் பெயர் பட்டியலில் ஒப்பமிடவைத்து ஒவ்வொரு மேடைகளிலும் அவர்கள் மூலமாக வாக்குகளை யானைச் சின்னத்திற்கு பெற்றுக் கொடுத்ததை தர்கா நகரில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இதற்கு மேலதிகமாக,ஐக்கிய தேசியக் கட்சியின் பேருவளைத் தொகுதி அமைப்பாளரான இப்திகார் ஜெமீல் அவர்கள், தனது சுயதேவை நிமித்தம் தர்கா நகர் மக்களை கைப்பாவையாக ஏமாற்றிக் கொண்டிருக்கும் சாமில் அப்பாஸ் அவர்களும் "தனக்கு போனஸ் கிடைக்கப் போகிறது"என்று சொல்லியே தர்கா நகர் மக்களிடம் வாக்கு கேட்டுத் திரிந்திருந்தார்.

இன்னும் அதற்கு மேலதிகமாக, நூர் ஹசிமா ஹாரிஸ் என்னும் திருமணமாகாத இளம் பெண்ணை அழைத்து, "நீங்களும் வாருங்கள்; பெண்கள் தேசியப் பட்டியலில் உங்களுக்கும் போனஸ் தருகிறேன்." என்று கூறி ஒவ்வொரு மேடை மேடையாக ஏறி பேசவைத்து மானபங்கப்படுத்தியதுடன் கடைசியில் எந்தவொரு முஸ்லிமுக்கு கூட கொடுக்காமல் தேசியப் பட்டியல் மூலம் கிடைத்த எட்டு உறுப்பினர்களையும் வெறும் முஸ்லிம்களால் கிடைத்த வாக்குப் பலத்தினால் கிடைத்தது என்ற நன்றியே இல்லாமல் அனைத்தையும் அந்நியவர்களுக்கே தாரைவார்த்து மீண்டுமொரு முறை ஐக்கியத் தேசியக் கட்சி அமைப்பாளர் இப்திகார் ஜெமீல் அவர்கள் ஏமாற்றியுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இவ் ஏமாற்று வேலைகள் இன்றுமட்டுமல்ல. பேருவளையிலும் மட்டுமல்ல. முழு இலங்கையிலும்  ஐக்கியத் தேசியக் கட்சி முஸ்லிம்களுக்கு காலங்காலமாக செய்துவரும் துரோகத்தனமாகும்.

தற்போது ஐக்கியத் தேசியக் கட்சியானது ஆட்சியிலிருப்பதற்கு காரணம் முஸ்லிம்களது வாக்குகள்தான் என்பதை யாராலும் மறைக்க முடியாது.எனினும் பாராளுமன்றத் தேர்தலில் தனக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனங்களில் எந்த ஒன்றையேனும் முஸ்லிம்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றியதுதான் இந்த ஐக்கியத் தேசியக் கட்சி முஸ்லிம்களுக்கு செய்த நன்றிக் கடன் என்பதை எவறும் மறுக்க முடியாது.

ஆனால் முஸ்லிம்களின் வாக்குகள் சொற்ப அளவில்  கிடைத்த  சுதந்திரக் கட்சியானது கௌரவ ஹிஸ்புல்லாஹ், பௌசி, பைசர் முஸ்தபா என்று மூன்று முஸ்லிம்களுக்கு தேசியப் பட்டியலை வழங்கி முஸ்லிம்களை கௌரவப்படுத்தியது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 90 வீதமான முஸ்லிம்களின் வைக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றது.முன்னாள் அமைச்சர் கௌரவ இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களுக்கு தேசியப் பட்டியல் தருவதாக கூறி முழு நாட்டிலும் அவர அக்கட்சி மேடையேற்றியிருந்தது.

இதுதான் ஐக்கிய தேசியக் கட்சியின் வழமையாகும். முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதும் தேசியப் பட்டியல் தருகிறோம் என்று சொல்லுவதும் பின்பு மக்களை ஏமாற்றுவதுமே வழமையாகும்.

இன்றிலிருந்தேனும் முஸ்லிம்கள் தெளிவுபெற வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஏமாற்று வேலைகளையும் அக்கட்சிக்குள் இருக்கும் எம்மவர்களின் கையாலாகாத தன்மையையும் இன்றேனும் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

பேருவளை முஸ்லிம்கள், முஸ்லிம்களுக்கு என்ன செய்தாலும் கண்ணை மூடிக் கொண்டு, எந்த எதிர்பார்புமின்றி அவர்கள் பச்சைக்கே வாக்களிப்பார்கள் என்ற தைரியம்தான்தான் அக்கட்சியின் முஸ்லிம்கள் மீதான அநியாயங்களுக்கு காரணமாக உள்ளது.

ஐக்கியத் தேசியக் கட்சியின் பேருவளைத் தொகுதி அமைப்பாளர் தனக்கு கிடைக்கும் அனைத்து வேலைவாய்ப்புக்களையும் அந்நியவர்களுக்கே வழங்குவதாகவும்.தனக்கு வாக்களித்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து வரப்பிரசாதங்களையும் அந்நியவர்களுக்கே வழங்குவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் ஏமாற்றினாலும்  ஏமாற்றாவிட்டாலும்  செய்தாலும்  செய்யாவிட்டாலும் போனஸ் கொடுத்தாலும் , கொடுக்காவிட்டாலும் முஸ்லிம்கள் கண்ணை மூடிக்கொண்டு பச்சைக்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையே முஸ்லிம்களை தொடர்ந்து ஏமாற்ற அவர்களை தூண்டியுள்ளது.

எனவே பேருவளை,தர்கா நகர் முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.தங்களது சிந்தனைகளை மாற்ற வேண்டும்.தங்களது வாக்குகளை இனிமேலும் ஏமாறுவதற்காக பயன்படுத்தக் கூடாது.பச்சைதான் என்ற கொள்கை எங்களை எப்பொழுதும் ஏமாளிகளாக்கக் கூடாது.

மொஹமட் இர்பான் - பேருவளை
UNP யின் போனஸ் பூச்சாண்டி ; மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்ட தர்கா நகர் முஸ்லிம்கள்.. UNP யின் போனஸ் பூச்சாண்டி ; மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்ட தர்கா நகர் முஸ்லிம்கள்.. Reviewed by nafees on 00:22 Rating: 5

No comments:

Powered by Blogger.