இளம் தலைவர் ஒருவரிடம் UNP தலைமை வழங்கப்பட வேண்டும் ..



ஐக்கிய தேசிய கட்சி 2020 ஆம் ஆண்டில் அதிகாரத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமானால்உடனடியாக தற்போதைய தலைவர் பதவி விலகி புதிய இளம் தலைவர் ஒருவரிடம் தலைமை வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாபோம் எனும் தேசிய அமைப்பு இன்று (17) அறிவித்தல் விடுத்துள்ளது.


தம்புள்ளையில் இன்று (17) அவ்வமைப்பு நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த வேண்டுகோளை அச்சங்கத்தின் செயலாளர் ஹிங்குரங்கொட பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


இச்சங்கம் 25 மாவட்டங்களிலிலிருந்துமுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாப்போம் என்ற பெயரில் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர்.


தற்போதுள்ள தலைவர் கடந்த 25 வருடங்களாக தலைமைத்துவத்தில் இருந்தும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் தனி அரசாங்கமொன்றை அமைக்க முடியவில்லை.


இதனால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு சகலரும் ஏற்றுக் கொள்ளும் இளம் தலைவர் ஒருவரை நியமிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். கட்சித் தலைமையிலிருந்து நீங்கிவிட்டு பிரதமர் பதவியை வைத்துக் கொள்ளுமாறும் அவ்வமைப்பின் செயலாளர் விக்ரமசிங்க மேலும் கேட்டுள்ளார்.

இளம் தலைவர் ஒருவரிடம் UNP தலைமை வழங்கப்பட வேண்டும் .. இளம் தலைவர் ஒருவரிடம் UNP  தலைமை வழங்கப்பட வேண்டும் .. Reviewed by nafees on 21:32 Rating: 5

No comments:

Powered by Blogger.