பொலிசாருக்கு எதிராக பாதையில் படுத்த கண்டி மாவட்ட UNP பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக பொலிஸார் வழக்குப் பதிவு.


நாவலபிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த ராஜபக்ஷவை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில், வீதியில் படுத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கண்டி மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் ஆனந்த அலுத்கமகே மீது, சாலை ஒழுங்கு மீறலின் கீழ், பொலிஸார் வழக்குப் பதிவு செய்யவுள்ளனர்.

இதற்குத் தேவையான அனைத்து சட்டரீதியான பத்திரங்களும், நாவலபிட்டி நீதவான் நீதிமன்றத்தில், நேற்று (16) ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்துடன், மேலும் 12 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அவர்களுள், பலர், நாவலபிட்டி நகர சபை மற்றும் பிரதேச சபையின் கீழ், கடந்த உள்ளூராட்சி மன்றங்களில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிட்டவர்கள் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிசாருக்கு எதிராக பாதையில் படுத்த கண்டி மாவட்ட UNP பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக பொலிஸார் வழக்குப் பதிவு. பொலிசாருக்கு எதிராக பாதையில் படுத்த கண்டி மாவட்ட UNP பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக பொலிஸார் வழக்குப் பதிவு. Reviewed by nafees on 23:34 Rating: 5

No comments:

Powered by Blogger.