கண்டி கலவரம்.. குண்டசாலை பிரதேச சபை உறுப்பினர் சமந்த பெரேரா கைது. sp
உறுப்பினர் ஒருவர் நேற்று (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
பயங்கரவாத புலனாய்வு பிரிவு அதிகாரிகளே பிரதேச சபை உறுப்பினரை நேற்று இரவு கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இம்முறை பிரதேச சபை தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்ப்பாக போட்டியிட்டு குண்டசாலை பிரதேச சபைக்கு தெரிவான திகன, ரஜவெல்ல பகுதியை சேர்ந்த சமந்த பெரேரா எனும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
திகன பகுதியில் உள்ள விற்பனை நிலையங்கள் மற்றும் வணக்கஸ்தலங்களை தாக்கி அவற்றை தீ வைத்த சேதப்படுத்திய குற்றத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் இன்று (29) தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
கண்டி கலவரம்.. குண்டசாலை பிரதேச சபை உறுப்பினர் சமந்த பெரேரா கைது. sp
Reviewed by nafees
on
22:14
Rating:
No comments: