நேற்று இரவு மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு படுகொலை சம்பவத்தின் அப்டேட். mw
நேற்று இரவு 8.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இந்த நபர் உயிரிழந்தது தொடர்பில் காவற்துறை தெரிவித்தவை..
'நிப்பு' என்று அழைக்கப்படும்
சாஹுல் ஹமீட் முஹம்மட் நிப்ராஸ்
என்ற 31 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாக காவற்துறை தெரிவித்தது.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்கள் தொடர்பில் இதுவரை தெரியவராத நிலையில் , ஜணாஸா தொடர்பான நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.
-அல்மசூறா / மடவளை நியூஸ்
நேற்று இரவு மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு படுகொலை சம்பவத்தின் அப்டேட். mw
Reviewed by nafees
on
00:33
Rating:
No comments: