கணவர் வெளிநாட்டில்... பிறந்த குழந்தையை உடனே கொன்று புதைத்த தாய். mo


குழந்தை ஒன்றை பிறந்த உடனேயே குழிதோண்டி புதைத்த தாய் ஒருவர் தம்புள்ளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

தம்புள்ளை, நிகவட்டவன பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 15ம் திகதி வீட்டில் வைத்து பிறந்த குழந்தையை குழிதோண்டி புதைத்ததாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படியே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரான பெண்ணுக்கு மேலும் இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும், பெண்ணின் கணவர் கடந்த 04 ஆண்டுகளாக வௌிநாட்டில் தொழில் புரிவதாகவும் பொலிஸரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

வீட்டு முற்றத்தில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்திற்கு தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலை நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்கப்பட்ட பின்னர் குழந்தையின் சடலத்தை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர். 

தம்புள்ளை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கணவர் வெளிநாட்டில்... பிறந்த குழந்தையை உடனே கொன்று புதைத்த தாய். mo கணவர் வெளிநாட்டில்... பிறந்த குழந்தையை உடனே கொன்று புதைத்த தாய். mo Reviewed by nafees on 03:29 Rating: 5

No comments:

Powered by Blogger.