தேசிய சாதனை படைத்த பல்கும்புர முஸ்லிம் வித்தியாலய அதிபர் M.M.M. இம்ரானுக்கு வாழ்த்துக்கள்.

பல்கும்புர முஸ்லிம் வித்தியாலய அதிபரான கலகெதரயைச் சேர்ந்த M.M.M. இம்ரான் அவர்கள் சாதனை தேசிய கல்வி
நிறுவகத்தில் கல்விமானி பட்டத்தை பெற்றார்
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பக் கல்விப் பட்டத்தைப் பெற்றதன் மூலம் இலங்கையில் இவ்வாரான பட்டத்தைப் பெற்ற ஒரே ஒரு முஸ்லிம் என்ற சாதணையைப் படைத்துள்ளார்.
இவர் கட்டுகஸ்தொட்ட வலயத்தின் ஆசிரிய ஆலோசகராகவும் ,கணனி வல நிலையத்தில் விரிவுரையாளராகவும் ,பரகஹதெனிய தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபியா கலாபீடத்தில் விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
தற்போது கண்டி வர்த்தக சங்கத்தின் பாகிஸ்தான் கணனி நிலைய இணைப்பாளராகவும் ,மத்திய மாகாண கல்வித் திணைக்களம் ,தேசிய கல்வி நிறுவனம் என்பவற்றில் மென் பொருள் வடிவமைப்பாளராகவும் கடமையாற்றும் ஜனாப் இம்ரான் கலகெதர ஐப்பார் மத்திய கல்லூரியில் உயர்தரம் வரை கற்று அதே பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றி தற்போது பல்கும்புர முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றுகின்றார்.
இவர் காலம் சென்ற கலகெதர ஜனாப் முக்தார் அவர்களதும் ஜனா பா ஸுலைஹா பீபி அவர்களதும் மூத்த மகனாவார்.
2013 ஆம் ஆண்டு கல்வி நிருவாக சேவையில் சித்தியடைந்துள்ள இவரது சேவையை சமூகம் பெற்றுப் பயனடைய வாழ்த்துகின்றோம்.
தகவல்-றிஸ்மி ராஸிக்
கலகெதர
தேசிய சாதனை படைத்த பல்கும்புர முஸ்லிம் வித்தியாலய அதிபர் M.M.M. இம்ரானுக்கு வாழ்த்துக்கள்.
Reviewed by nafees
on
22:01
Rating:
Reviewed by nafees
on
22:01
Rating:
MASHAALLAH GRATE BRO
ReplyDelete